Recommend it

Feb 6, 2011

Raw Plantain & Dry Prawn Fry/வாழைக்காய் பெரிய சென்னாங்குன்னி வறுவல்

When I resided in the US initially in Michigan, my friend from Andhra gave us this dish for lunch. I don't remember any of the ingredients except plantains and dry prawns. Whatever ingredient I had in mind, I threw them in the sauce pan and cooked this dish. My mom loved this dish especially.



Ingredients:
Raw plantains (big) - 2 (chopped)
Dry prawns - 1 cup
Onion - 1 (chopped)
Garlic - 6 big pods (crushed)
Cumin powder - 1/2 tsp.
Curry leaves - 1 sprig
Mustard seeds - 1 tsp.
Fennel seeds - 1 tsp.
Kashmiri red chilli powder - 1.75 tsp.
Coriander powder - 2 tsp.
Turmeric powder - a pinch
Oil - 1.5 tbsp.
Salt (to taste)

Method:
Soak dry prawns in hot water for 15 minutes. Wash 3 to 4 times.
Heat oil in a pan and add mustard and fennel seeds.
When the mustard seeds crackle, add crushed garlic and saute till golden colour.
Add onions and curry leaves and saute till translucent.
Add raw plantains and saute for 2 minutes.
Add the powders and salt and saute the mixture.
Add required amount of water.
When the vegetable becomes half-tender, add the prawn (without water) and saute.
Cover and cook till it becomes dry.
Enjoy with rasam rice.
_______________________________________________________________________________
நான் மிச்சிகனில் தங்கி இருக்கும்பொழுது, ஆந்திரா தோழி ஒருவர் இந்த வறுவலை செய்து கொடுத்தார். இதன் சமையல் குறிப்பு எனக்கு சுத்தமாக ஞாபகமில்லை. வாழைக்காயும், பெரிய சென்னாங்குன்னியும் தான் ஞாபகம் இருந்தது. என் மனதில் தோன்றிய பொருட்களை வைத்து இந்த வறுவலை செய்தேன். என் அம்மா மிகவும் விரும்பி உண்டார்கள்.




தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் - 2 (நறுக்கியது)
சென்னாங்குன்னி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பெரிய பல் (நசுக்கியது)
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 10 இலைகள்
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
காஷ்மிரி சிகப்பு மிளகாய் பொடி - 1.75 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - 1.5 மேஜைகரண்டி
உப்பு (தேவையான அளவு)

செய்முறை:
சென்னாங்குன்னியை 15 நிமிடத்திற்கு வெந்நீரில் ஊற வைக்கவும். 3 அல்லது 4 முறை கழுவவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு போடவும்.
கடுகு வெடித்ததும் பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் கருவேப்பில்லை இவற்ற்றை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
வாழைக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
பொடிகளையும் மற்றும் உப்பும் சேர்த்து வதக்கவும்.
வேண்டிய அளவு தண்ணி ஊற்றவும்.
வாழைக்காய் பாதி வெந்ததும் சென்னாங்குன்னி  சேர்த்து வதக்கவும்.
இதனை மூடி வைத்து, அவ்வப் போது கிளறி கெட்டி ஆகும் வரை சமைக்கவும்.
ரச சாதத்துடன் ரசிச்சு சாப்பிடவும்.

7 Bites:

wow very lovely recipe... and your explanation in both english and tamil is good....


DNSW: E Roundup
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

Such a beautiful and new combination for me, delicious side dish..

Chennakunni- been age i have tasted! That is a wonderful combo!

Never tried this combo' looks delicious.

Awesome combo..great recipe usha..loved ur version..after seeing this, feel like having it rite now..

Super click...The combo is very new to me...