Recommend it

Feb 19, 2011

Fish Fry/மீன் வறுவல்

During the old days in Mumbai, we used to visit my hubby's good ol' friend (who is a busy bee) on Sundays (not every Sunday). He used to treat us with this juicy, relishing and lip-smacking fish fry which we would guzzle on very quickly without leaving a single crumb no matter how hard we try to eat them very slowly. Then he taught me this recipe one day. He instructed me to marinate the fish pieces with red chilli powder, salt and lemon juice for a few minutes and then roll them in rava/sooji (semolina) before dumping them in the hot oil for deep-frying. This type of fish fry is common in the Mangalore and the Goan region. Fishes like the Pomfret, King fish and Rawas (Indian Salmon) are used in the making of this snack.



I added ginger-garlic paste suitable to the palettes of my family. This is how I prepared the fry. This time I didn't include the measurements of the ingredients I added and the number of fish fillets.



Marinate the fish fillets with red chilli powder, ginger-garlic paste, salt and lemon juice. Cover and keep aside for half an hour. In a plate, keep the rava/sooji ready for the fish pieces to roll on before deep-frying. After half an hour, roll the fish pieces in rava/sooji and deep fry in hot oil. Do try to be careful while frying. The semolina may burst out of the oil and land on you.

Enjoy the fry as a side dish for rice or a snack.
______________________________________________________________________________
இந்த சமையல் குறிப்பு என் கணவரின் நண்பர் கூறினார். மீனை, மிளகாய் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு இவற்றோடு கலந்து சில நிமிடங்கள் ஊற விடவும். மீனை வறுப்பதற்கு முன்பு ரவையில் பிரட்டி பொரித்து எடுக்கவும். மேலும் இந்த வறுவல் மங்களூர், கோவா பகுதிகளில் செய்யும் முறை என்று கூறினார். வௌவால் மீன், வஞ்சிரம் மற்றும் ரவாஸ் (இந்தியன் சல்மன்) இவற்றில் சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறினார்.




என் குடும்பத்தின் ருசிக்கேற்ப மீனுடன் இஞ்சி, பூண்டு விழுதினை கலந்து சமைத்துள்ளேன். இந்த முறை நான் தேவையான பொருட்களின் அளவையும், மீன் துண்டுகளின் எண்ணிக்கையும் குறிப்பிடவில்லை. மீன் வறுவலை பின்வருமாறு சமைத்தேன்.


மீன் துண்டுகளை சுத்தப்படுத்தி மிளகாய் பொடி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்ச சாறு சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊறவிடவும். ஊற வைத்த மீன் துண்டுகளை ரவையில் பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரிக்கும் பொழுது கவனமாக இருக்கவும். ரவை மேலே தெறித்தாலும் தெறிக்கும். சாதத்துடன் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Sent off to Akila's "Dish Name Starts With F" event.

Feb 17, 2011

Karunai Kizhangu Kuzhambu/கருணைக் கிழங்கு குழம்பு



Ingredients:
Karunai Kizhangu/Yam - 4
Tamarind extract - 1 cup
Onion - 1 (chopped)
Tomato (small) - 1 (chopped)
Curry leaves - 1 sprig
Salt (to taste)
Oil - 2 tbsp.
Sambar powder - 1 tsp.
Coriander powder - 3 tsp.
Turmeric powder - 1/4 tsp.
Mustard seeds - 3/4 tsp.

To roast and grind:
Jeera - 1 tsp.
Urad dal - 1 tsp.
Chana dal - 1 tsp.
Rice - 1 tsp.
Grated coconut - 3/4 tbsp.
Fenugreek seeds - a pinch
Dry whole red chilli - 4

Method:
Wash the yam well. Cut into four pieces and pressure cook them.
Roast the given ingredients and grind into paste by adding little water. Keep aside.
Heat the oil in a kadai and add mustard seeds.
When the seeds crackle, add the onion pieces and saute till translucent.
Add tomatoes and saute till mushy.
Now add the sambar powder and coriander powder and mix well.
Pour the tamarind extract, salt to taste, required water and turmeric powder.
Bring it to a boil and cook till the raw smell fades.
Add the paste and mix.
Meanwhile peel the yam and mash well.
Let the kuzhambu cook for 3-4 minutes. Add the mashed yam and mix.
Let it cook for 5 minutes and stir in between to avoid sticking in the kadai. Add curry leaves and stir.
Remove from heat and enjoy with hot rice.

Note:
While grinding the dals and spices, first powder them and then add little water to make a paste.
If you want, you can also add a little bit of jaggery for an extra kick.
__________________________________________________________________________



தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு - 4
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - ருசிகேற்ப
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
தனியாப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 10 இலைகள்
புளித்தண்ணீர் - 1 கப்

வறுத்து அரைப்பதற்கு:
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
அரிசி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 3/4 மேஜைக்கரண்டி

செய்முறை:
கருணைக்கிழங்கை நன்றாக கழுவவும்.
நான்காக நறுக்கி குக்கரில் வேக வைக்கவும்.
'வறுத்து அரைபதற்கு' கொடுத்துள்ள பொருட்களை வாசனை வரும் வரை வறுத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
சாம்பார் பொடி மற்றும் தனியா பொடி சேர்க்கவும்.
புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி, தேவையான தண்ணீர் ஊற்றி கிளறவும்.
புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றவும்.
3 முதல் 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
கிழங்கின் தோலை உரித்து, கிழங்கை மசிக்கவும்.
மசித்த கிழங்கை குழம்பில் சேர்த்து கலக்கவும்.
5 நிமிடம் கொதிக்க விடவும். அடி பிடிக்காமல் இருக்க இடையே அடிக்கடி கிளறவும்.
பிறகு கறிவேப்பில்லை தூவி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கவும்.
சூடான சத்தத்துடன் பரிமாறவும். ருசியாக இருக்கும்.

குறிப்பு:
வறுத்து அரைக்கும் பொருட்களை முதலில் பொடி செய்துவிட்டு பிறகு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
ருசிக்காக வெல்லம் குறைந்த அளவில் போடவும்.

Feb 14, 2011

Spinach Masiyal/பசலைக்கீரை மசியல்



Ingredients:
Spinach - 1 medium bunch
Onion - 1/2 (chopped)
Tomato - 1/2 (chopped)
Salt (to taste)
Dry red chillies - 2
Mustard seeds - 1 tsp.
Cumin seeds - 1 tsp.
Urad dal - 1/2 tsp.
Oil - 1.5 tsp.

Method:
Remove the roots from spinach.
Wash and boil it with required water for 5 to 7 minutes.
Let it cool lightly. Blend the spinach.
Heat oil in a pan and add the seeds, chilli and dal.
When they crackle, add onions and saute till they change the colour.
Add the tomatoes and salt. Saute for a few minutes.
Add this to the spinach and mix. Serve warm with hot rice and ghee.
____________________________________________________________________________


தேவையான பொருட்கள்:
பசலைகீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
வர மிளகாய் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1.5 தேக்கரண்டி

செய்முறை:
பசலைகீரையின் வேரை மட்டும் நீக்கி விடவும்.
கீரையை நன்றாக அலசவும். கீரையில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைக்கவும்.
சிறிது ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுந்து, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வரை வதக்கவும். இதனை மசித்த கீரையுடன் கலக்கவும். சூடான சாதத்துடன் மற்றும் நெய்யுடன் பரிமாறவும்.

Feb 10, 2011

Spinach & Potato Pakora (Pakoda)/பசலைக்கீரை உருளைகிழங்கு பக்கோடா



Ingredients:
Spinach - 1 cup (chopped)
Chickpea flour/besan - 2 cups
Baking soda - a pinch
Salt - as per taste
Kashmiri red chilli powder - 1 tsp.
Onions (small) - 2 (sliced thinly)
Potatoes (small) - 2 (peeled and chopped into small pieces)
Ajwain - 1/2 tsp.
Turmeric powder - 1/4 tsp.
Oil (to deep fry)

Method:
In a vessel, mix all the ingredients except oil.



Sprinkle water and prepare into a thick batter.
Heat oil for deep-frying.



Drop the batter in small portions and deep-fry till golden colour.

Remove and enjoy hot with a hot piping cup of tea.

______________________________________________________________________________



தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 2 கப்
வெங்காயம் பெல்லாரி (சிறியது) - 2 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
உருளைகிழங்கு (சிறியது) - 2 (தோல் இல்லாமல் நறுக்கியது)
காஷ்மீரி சிகப்பு மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
ஓமம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் போடி - 1 /4 தேக்கரண்டி
சோடா மாவு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை கலக்கவும்.



தண்ணீர் தெளித்து கெட்டி மாவு ஆக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும்.



மாவை வேண்டிய அளவில் கிள்ளி போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.

என்சாய்! :)

Feb 6, 2011

Raw Plantain & Dry Prawn Fry/வாழைக்காய் பெரிய சென்னாங்குன்னி வறுவல்

When I resided in the US initially in Michigan, my friend from Andhra gave us this dish for lunch. I don't remember any of the ingredients except plantains and dry prawns. Whatever ingredient I had in mind, I threw them in the sauce pan and cooked this dish. My mom loved this dish especially.



Ingredients:
Raw plantains (big) - 2 (chopped)
Dry prawns - 1 cup
Onion - 1 (chopped)
Garlic - 6 big pods (crushed)
Cumin powder - 1/2 tsp.
Curry leaves - 1 sprig
Mustard seeds - 1 tsp.
Fennel seeds - 1 tsp.
Kashmiri red chilli powder - 1.75 tsp.
Coriander powder - 2 tsp.
Turmeric powder - a pinch
Oil - 1.5 tbsp.
Salt (to taste)

Method:
Soak dry prawns in hot water for 15 minutes. Wash 3 to 4 times.
Heat oil in a pan and add mustard and fennel seeds.
When the mustard seeds crackle, add crushed garlic and saute till golden colour.
Add onions and curry leaves and saute till translucent.
Add raw plantains and saute for 2 minutes.
Add the powders and salt and saute the mixture.
Add required amount of water.
When the vegetable becomes half-tender, add the prawn (without water) and saute.
Cover and cook till it becomes dry.
Enjoy with rasam rice.
_______________________________________________________________________________
நான் மிச்சிகனில் தங்கி இருக்கும்பொழுது, ஆந்திரா தோழி ஒருவர் இந்த வறுவலை செய்து கொடுத்தார். இதன் சமையல் குறிப்பு எனக்கு சுத்தமாக ஞாபகமில்லை. வாழைக்காயும், பெரிய சென்னாங்குன்னியும் தான் ஞாபகம் இருந்தது. என் மனதில் தோன்றிய பொருட்களை வைத்து இந்த வறுவலை செய்தேன். என் அம்மா மிகவும் விரும்பி உண்டார்கள்.




தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் - 2 (நறுக்கியது)
சென்னாங்குன்னி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பெரிய பல் (நசுக்கியது)
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 10 இலைகள்
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
காஷ்மிரி சிகப்பு மிளகாய் பொடி - 1.75 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - 1.5 மேஜைகரண்டி
உப்பு (தேவையான அளவு)

செய்முறை:
சென்னாங்குன்னியை 15 நிமிடத்திற்கு வெந்நீரில் ஊற வைக்கவும். 3 அல்லது 4 முறை கழுவவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு போடவும்.
கடுகு வெடித்ததும் பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் கருவேப்பில்லை இவற்ற்றை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
வாழைக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
பொடிகளையும் மற்றும் உப்பும் சேர்த்து வதக்கவும்.
வேண்டிய அளவு தண்ணி ஊற்றவும்.
வாழைக்காய் பாதி வெந்ததும் சென்னாங்குன்னி  சேர்த்து வதக்கவும்.
இதனை மூடி வைத்து, அவ்வப் போது கிளறி கெட்டி ஆகும் வரை சமைக்கவும்.
ரச சாதத்துடன் ரசிச்சு சாப்பிடவும்.

Feb 3, 2011

Boiled Sweet Potatoes/வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு

In my school days, my mom used to boil these lovely-coloured potatoes and sprinkle them with pepper powder. To cherish my nostalgic memories, I made them for my family this week and added chat masala for an extra kick. This is just a very simple snack to prepare.

Boil the sweet potatoes and peel the skin. Cut them in desired shapes and sprinkle with pepper and chat masala. Enjoy warm.
___________________________________________________________________________

சிறு வயதில் என் அம்மா கிழங்கை வேக வைத்து மிளகு பொடி தூவி கொடுப்பார்கள். மிக எளிமையான உணவு.



கிழங்கை வேக வைத்து தோலை உரிக்கவும். வேண்டிய வடிவத்தில் கிழங்கை நறுக்கி மிளகு பொடி, சாட் மசாலா தூவி வெதுவெதுப்பாக பரிமாறவும்.